நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரு வயது குழந்தை கடித்து நாகப் பாம்பு பலி

புது டெல்லி: 

பிகார், மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு பயிலானது. பொதுவாக பாம்பு கடித்துதான் மனிதர்கள் உயிரிழப்பார்கள். ஆனால், விளையாட்டு தனமாக குழந்தை கடித்து பாம்பு பலியாகி உள்ளது.

இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை உடனடியாக கிராமத்துக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை மேல் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை குழந்தையில் சிக்கிக் கொண்டுள்ளது. அதை கையில் பிடித்து குழந்தை கடித்துள்ளது.

இதில் பாம்பு உயிரிழந்த நிலையில், குழந்தையும் மயக்கமடைந்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset