செய்திகள் இந்தியா
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
புது டெல்லி:
மணிப்பூருக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் அந்த மாநில மக்களுக்கு பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமர்சித்தது.
2023-இல் குகி, மைதேயி இன மோதல் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
லட்சக்கணக்கானவர்கள் முகாம்களில் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரமும் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்நிலையில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
இதையடுத்து பிரதமர் மோடி மணிப்பூக்கு சனிக்கிழமை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.
பிரதமரின் இப் பயணத்தை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிற மாநிலங்களுக்கான பயணத்துக்கு இடையே 3 மணிநேர இடைவேளை போல் மணிப்பூருக்கு பிரதமர் சென்றுள்ளார். இது, மனிதாபிமான நோக்கம் கொண்டதல்ல; வெறும் சம்பிரதாயப் பயணம். காயம்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு. மக்களின் கூக்குரலை கேட்பதில் இருந்து தப்பித்து, வழக்கமான சாலை ஊர்வலம் நடத்தியுள்ளார் பிரதமர்.
மணிப்பூர் துயரங்களுக்கு மத்தியில் பிரதமர் 46 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி, மணிப்பூரில் அப்பாவி மக்களின் வாழ்வை அழித்துவிட்டது. அங்கு வன்முறை நீடிக்கிறது.
மணிப்பூரில் பிரதமர் தனக்கு தானே நடத்திக் கொண்ட பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி, மக்களின் காயத்தின் மீதான கொடூர தாக்குதலாகும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
