நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்

புதுடெல்லி: 

ஆன்லைன் சூதாட்ட செயலிகள்  மூலம் சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவண் உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தற்போது பாலிவுட் நடிகர் சோனு சூட், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பா, யுவராஜ் சிங் ஆகியோர் வரும் 22-ம் தேதி அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset