நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை

புது டெல்லி: 

upi நடைமுறை மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பு ஒருநாளுக்கு அதிபட்சம் ரூ. 2 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும் என்ற நிலையில் தற்போது ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து பங்குச் சந்தை முதலீடு, கடனைத் திரும்பச் செலுத்துதல், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம், காப்பீடு தொகை மற்றும் பயணக் கட்டணம் போன்ற பெரிய பரிவர்த்தனைகள் சார்ந்த பயன்பாடுகளுக்காக நாள் ஒன்றுக்கு யுபிஐ மூலம் ரூ. 2 லட்சம் வரை அனுப்பலாம் என்றிருந்ததை தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 லட்சம் வரையும் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் வரை செலுத்தும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

கிரெடிட்ட கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவைத் தொகையை செலுத்தும் வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நகை வாங்குவதற்கு upi மூலம் செலுத்தும் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனை வரம்பு ஏற்கெனவே உள்ளது போன்று ரூ. 1 லட்சமாகவும், கல்விக் கட்டணம், மருத்துவ கட்டணத்துக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக தொடரும். இந்த நடைமுறை இந்தியாவில் அமலாகி உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset