நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்

புது டெல்லி: 

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேற்கு வங்க பல்கலைக்கழக துணைவேந்தர், பயோடேட்டாவில் அந்தக் குற்றச்சாட்டையும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், மாவட்ட அலுவலரால் அமைக்கப்படும் உள்ளூர் புகார்கள் குழுவிடம் துணைவேந்தர் நிர்மல்காந்தி சக்ரவர்த்தி மீது ஆசிரியை பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்று 6 மாதங்களுக்கு பின்னர் ஆசிரியை  புகார் அளித்துள்ளதால் புகாரை குழு நிராகரித்தது. இதை கொல்கத்தா உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,
தவறு செய்தவரை மன்னிக்கலாம். ஆனால் தவறை மறக்கக் கூடாது. தவறை விசாரிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதை மறக்கக் கூடாது.

எனவே ஆசிரியை தெரிவித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டையும், நீதிமன்ற தீர்ப்பையும் தனது பயோடேட்டாவில் துணைவேந்தர் நிர்மல்காந்தி சக்ரவர்த்தி இணைக்க வேண்டும். இது தனது வாழ்நாள் முழுவதும் அவர் வேதனையடைய வழிவகுக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset