நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: 

புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் - சாயிரா பானு தம்பதிக்கு கதீஜா, ரஹீமா என்ற இரண்டு மகள்களும் ஏ.ஆர் அமீன் என்ற மகனும் உள்ளனர். இதில் கதீஜா இசையமைப்பாளராகவும், ஏ.ஆர் அமீன் பாடகராகவும் வலம் வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிள்ளைகளில் திரையுலகத்துடன் தொடர்பில்லாமல் இருப்பவர் ரஹீமா. இவர் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தன் படிப்பை முடித்திருக்கிறார். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மகள் கல்லூரி படிப்பு முடிந்ததும் பட்டம் பெற்றுள்ளதை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ``என் லிட்டில் பிரின்சஸ் ரஹீமா, Hospitality, Entrepreneurship, Innovation ஆகியவற்றில் கவனம் செலுத்தி கிளியன் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஒரு தந்தையாக பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset