நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

WAVES BAZAAR 2025 தொடர்பான பயிற்சி பட்டறை: மலேசிய அனைத்துலக திரைப்பட விழா உடன் இந்திய தூதரகம் இணைந்து நடத்துகிறது

கோலாலம்பூர்: 

WAVES BAZAAR 2025 தொடர்பான பயிற்சி பட்டறையானது தலைநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

MALAYSIA INTERNATIONAL FILM FESTIVAL உடன் இணைந்து INDIA HIGH COMMISION OF KUALA LUMPUR ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் திரைப்பட கலைஞர்கள், மலேசியா பேராளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

WAVES BAZAAR 2025 என்பது மீடியா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ONE STOP CENTRE ஆகும். 

திரைப்படம் என்றில்லாமல் ஆடியோ விஷுவெல்ஸ், கிராஃபிக்ஸ், இன்ஃபோதெயின்மென்ட், செய்திகள், மின்னியல் விளையாட்டு ஆகியவை நிறைந்த ஒரு ONE STOP CENTRE ஆகும். 

இது தொடர்பான இந்தியாவில் நடைபெற்ற MEDIA & ENTERTAINMENT SUMMIT 2025 உச்சநிலை கூட்டத்திற்குப் பிறகு இந்த WAVES BAZAAR 2025 தொடங்க வழிவகுத்தது. 

WAVES BAZAAR அகப்பக்கம் வாயிலாக இந்தியாவில் உள்ள பல்வேறு ஊடக, கிரியேடிவ் நிபுணத்துவயாளர்களின் அறிவு பகிர்வை மேற்கொள்ளலாம். 

அதுமட்டுமல்லாமல்,  மலேசியா- இந்தியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பினால் இந்த முன்னெடுப்பு சாத்தியமாக்கப்படும். இந்த WAVES BAZAAR 2025 திட்டத்தை மலேசியா முழுவதும் பொரொமோஷன் செய்ய இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஊடக பிரிவு அதிகாரியான விவேகானந்தன் கூறினார். 

இந்திய தூதரகத்துடன் இணைந்து இந்திய நாட்டின் தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. 

முன்னதாக, GSC MYTOWN HALL திரையரங்கில் நடைபெற்ற WAVES BAZAAR 2025 தொடர்பான பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மலேசிய சர்வதேச திரைப்பட விழா அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியப் பேராளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset