நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா உதவி தொகை உட்பட பல சிறப்பு திட்டங்களைப் பிரதமர் அன்வார் அறிவித்தார்

புத்ரா ஜெயா:

தேசிய தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா உதவி தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் தனது மக்களுக்கான அறிவிப்பில் தெரிவித்தார்.

100 ரீங்கிட் உதவி தொகை நேரடியாக மக்களின் அடையாள அட்டைகளில் செலுத்தப்படும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, மலேசியத் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை வழங்கப்படும் என்றும் பிரதமர் அன்வார் அறிவித்தார். 

இன்றைய அறிவிப்பு பொது மக்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset