நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிறந்தநாளில் மகனுக்கு மரணத்தை பரிசாக தந்தை, அடுக்குமாடி குடியிருப்பில் வெடிக் குண்டையும் வைத்துள்ளார்: சியோலில் பரபரப்பு

சியோல்:

தென் கொரியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியபோது, ஒரு நபர் தனது சொந்த தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தனது மாமனார் தனது கணவரைச் சுட்டுக் கொன்றதாக ஒரு பெண்ணிடமிருந்து  போலிசாருக்கு அவசர அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கிடந்ததைக் கண்டனர்.

30 வயதுடைய பாதிக்கப்பட்டவர் பின்னர் இரவு 11.09 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆனால் அதிகாலை 12.20 மணியளவில் சியோலின் கங்னம் பகுதியில் கைது செய்யப்பட்டார் என்று சியோல் போலிசார் கூறினர்.

கைது செய்யப்பட்டபோது 63 வயதான சந்தேக நபர் இன்னும் ஒரு ஆயுதத்தை வைத்திருந்தார்.

அது பக்ஷாட் நிரப்பப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட குழாய் வடிவ துப்பாக்கி. இதை கொண்டு தான் அவர் தனது மகனின் மார்பில் சுட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட பிறகு, சந்தேக நபர் தனது வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக போலிசாரிடம் கூறினார்.

இதனால் அதிகாரிகள் உடனடியாக 105 குடியிருப்பாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்து, சிறப்பு போலிஸ் குழுவை கொண்டு சோதனை நடத்தியது.

பின்னர் பாதுகாப்புப் படையினர் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டை செயலிழக்கச் செய்தனர். இது மதியம் 12 மணிக்கு வெடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset