நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கு $250 "நேர்மை விசா" கட்டணம்

வாஷிங்டன்:

அமெரிக்கா செல்லவிரும்பும் வெளிநாட்டினர் இனி 250 டாலர் "நேர்மை விசா" கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களுக்கு இணங்குவதை ஊக்குவிப்பதற்காகத் திரும்பப் பெறும் வைப்புத்தொகையாக அது கருதப்படுகிறது.

அமெரிக்கா செல்வதற்குக் குடியுரிமையற்ற விசா பெற வேண்டிய அனைவருக்கும் அந்தக் கட்டணம் பொருந்தும்.

வர்த்தகத்துக்காகப் பயணம் செய்வோர், சுற்றுப்பயணிகள் அனைத்துலக மாணவர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

அமெரிக்காவின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள், வர்த்தகப் பயணிகளுக்குப் புதிய விசா கட்டண முறை பொருந்தாது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அவர்களுக்குத் தற்போது அமெரிக்க விசா விலக்கு உள்ளது.
 
ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset