நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் விலகினார்

வாஷிங்டன்:

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பதவியிலிருந்து தாம் விலகவுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியப் பின் மீண்டும் பேராசிரியராக தனது பணியைத் தொடரவுள்ளதாக கீதா கோபிநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக கீதா கோபிநாத் திகழ்கின்றார்.

கீதா அசாத்திய கல்வியறிவும், அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் என ஐ.எம்.எப். நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset