நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது

வாஷிங்டன்:

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்க வெளியேறுவதை அதன் அரசுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி ஃபெரூஸ் உறுதிப்படுத்தினார்.

கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக செயல்படும் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை அமெரிக்க வெளியிடாத நிலையிலும், இஸ்ரேலுக்கு எதிராக நிலையை எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகியது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது அமெரிக்கா மீண்டும் அவ்வமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது.

முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்க விலகியது.

- அஸ்வினி செந்தாமரை 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset