நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

15% தீர்வையுடன் ஜப்பான் அமெரிக்காவில் $550 பில்லியன் முதலீடு செய்யும்: டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதனை தமது Truth Social சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின்படி ஜப்பான் 15 விழுக்காடு தீர்வை செலுத்தும் என்றும் 550 பில்லியன் டாலரை அமெரிக்காவில் முதலீடு செய்யும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஜப்பானோடு செய்துள்ள அந்த ஒப்பந்தம் இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஆகப் பெரியது என அவர் சொன்னார்.

இரு நாடுகளிடையே நடைபெற்று வந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் இம்மாதம் டிரம்ப்பைச் சந்திக்க ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) விரும்புவதாக உள்ளூர் நாளிதழ் தெரிவித்தது.

இதற்கிடையில் ஜப்பானிய மேலவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்பும் பதவியில் நீடிக்க இஷிபா திட்டமிட்டிருப்பதால் அவரது கட்சியில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset