நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசியலுக்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது: உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு 

புது டெல்லி:

அரசியலுக்காக அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது என்று ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு எதிரான நில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்தாவே ஆதாரம் இல்லை என வழக்கை ரத்து செய்து விட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை பார்வதிக்கு சம்மன் அனுப்பியது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து பார்வதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்து கூறுகையில், அமலாக்கத் துறையின் செயல்பாடு அரசியல் தொண்டர்களைப்போல் உள்ளது. அரசியலுக்காக ஏன் அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது.

மகாராஷ்டிராவில் நான் பணியாற்றிய போது எனக்கு சில அனுபவம் உள்ளது. அமலாக்கத் துறைக்கு எதிராக மோசமான கருத்துகளை கூற நிர்பந்திட வேண்டாம் என்றது.

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்குவதற்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்கு அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset