நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஓடுபாதையில் சறுக்கிய ஏர் இந்தியா விமானம்

மும்பை:

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை 9.27 மணிக்கு கனமழை  பெய்தது.

இதனால் சற்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலிருந்த புல்வெளியில் மோதி நின்றது.

இதனால், விமானத்தின் வலதுபுற என்ஜினில் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மும்பை விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset