
செய்திகள் இந்தியா
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு
புது டெல்லி:
மும்பையில் 2006-இல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவ வழக்கில் தொடர்புடைய 12 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மும்பை புறநகர் 7 ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேருக்கு 2015-இல் சிறப்பு நீதிமன்றம் ஆயுள், மரண விதித்தது.
இதை எதிர்த்து குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் அனில் கிலோர், ஷ்யாம் சந்தக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது.
இவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என சந்தேகத்தின் பேரில் கூறுவதை ஏற்க முடியாது.
எனவே 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am