நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 500 கோடியில் ஏர் இந்தியா அறக்கட்டளை

புது டெல்லி: 

குஜராத் மாநிலம்  அகமதாபாதில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ரூ. 500 கோடியில் அறக்கட்டளை அமைக்கப்படும் என  டாடா குழுமம் தெரிவித்துள்ளது.  

டாடா குழுமம் நடத்தி வரும் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில்  240 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொடர் உதவிகளை வழங்கும் வகையில் ரூ. 500 கோடியில் அறக்கட்டளையை டாடா குழுமம் அமைத்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முன்பே தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset