நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்க துறை அதிகாரி திடீர் ராஜிநாமா

புது டெல்லி: 

தில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்ததில் முக்கியப் பங்கு வகித்த அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி கபில் ராஜ் மத்திய அரசுப் பணியை திடீரென்று ராஜிநாமா செய்தார்.

இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான கபில் ராஜ் 16 ஆண்டுகள் ஒன்றிய அரசுப் பணியாற்றி பின் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது.

கபில் ராஜ் நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஆண்டு ஜனவரியில் அமலாக்கத் துறை கைது செய்தது.

கபில் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு ஹேமந்த் சோரனை விசாரித்தது.

புதிய மதுபான கடைகள் முறைகேடு வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலை கபில் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு சோதனை நடத்தி கைது செய்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset