நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜூலை 23-ஆம் தேதி துவாஸ் 2-ஆவது இணைப்பைப் பயன்படுத்துவதை வாகனமோட்டிகள் தவிர்க்க வேண்டும்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரிலிருந்து வாகனத்தில் மலேசியா செல்வோர் வரும் புதன்கிழமை, ஜூலை 23-ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துவாஸ் இரண்டாம் இணைப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

துவாஸ் இரண்டாம் இணைப்பில் அவசரச் சேவைப் பயிற்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம், மலேசியாவின் சுற்றுப்புறப் பிரிவு இரண்டும் மற்ற சில அமைப்புகளுடன் இணைந்து துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனக் கசிவுப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன.

பயிற்சி நடக்கும் போது மலேசியாவை நோக்கிய துவாஸ் இணைப்புப் பதையில் உள்ள மூன்று தடங்களும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிக்கையில் தெரிவித்தது.

பயிற்சி நடக்கும்போது வாகனங்கள், சிங்கப்பூரை நோக்கிய துவாஸ் இணைப்புப் பகுதியில் உள்ள தடங்களில் ஒன்றுக்கு மாற்றிவிடப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset