நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

'Server' மென்பொருளில் ஊடுருவல்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தகவல் 

வாஷிங்டன்:

அரசாங்க அமைப்புகளும் வர்த்தகங்களும் தங்களுக்குள் ஆவணங்களைப் பகிரப் பயன்படுத்தும் 'Server' இயந்திர மென்பொருள் ஊடுருவப்பட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு மேம்பாடுகளை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த ஊடுருவலைப் பற்றித் தாங்கள் அறிவதாகவும் அரசாங்க, தனியார் பங்காளிகள் இரு தரப்பினருடனும் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த ஊடுருவலைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்ட வா‌ஷிங்டன் போஸ்ட் ஊடகம் அடையாளம் தெரியாத தரப்பினர் கடந்த சில நாள்களாக அமெரிக்க, அனைத்துலக அமைப்புகளையும் வர்த்தகங்களையும் குறிவைத்திருப்பதாகத் தெரிவித்தது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset