நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தங்கத்தின் விலையில் மாற்றம் வருமா?

நியூயார்க்: 

உலக பொருளாதார நிலவரத்தைக் கணித்து, தங்கத்தின் விலை திங்கள் காலை ஆசிய சந்தையில் மிகச் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள், அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி விகித முடிவுகள் குறித்து எதிர்பார்ப்பு நிலையில் உள்ளனர்.

தற்போது,  தங்கத்தின்  விலை 0.1% உயர்ந்து – US$3,353.81 ஆக உள்ளது. அமெரிக்க தங்க வர்த்தக மதிப்பும் – US$3,360.50 ஆக நிலைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஆகஸ்ட் 1 தேதியைக் குறித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தை முன்னேற்றத்தைக் கவனித்து வருகின்றனர். அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் நடக்கும் என்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய மத்திய வங்கி, பல தடவைகள் வட்டி விகிதங்களை குறைத்ததையடுத்து, இந்த வாரக் கூட்டத்தில் அதை 2.0% ஆக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கி பங்குச் சூழ்நிலைக்கு ஏற்ப வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் வாய்ப்பு உள்ளது என அதன் ஆளுநர் வாலர் தெரிவித்தார்.

இந்நிலையில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலையில் தங்கத்தின் விலை மேம்படக்கூடும் என கூறப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset