நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் தீ : ஐவர் மரணம்

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் அதில் பயணம் செய்த ஐவர் உயிரிழந்துள்ளனர். 

இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.

கப்பல் தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது.

தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset