செய்திகள் உலகம்
நடுவானில் விமான இயந்திரத்தில் தீ: லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு சம்பவம்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது.
விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது.
தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாண்டு டெல்டா விமானத்தில் இயந்திரம் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறையாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
