நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கழிவு நீர் கலப்பதைத் தடுக்க ஏரிகளைச் சுற்றி தங்கும் விடுதிகள் கட்ட பாகிஸ்தான் தடை விதித்துள்ளது

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் புதிதாக ஓட்டல் கட்டுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்காக அங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமீபத்தில் அங்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது அங்குள்ள ஒரு தங்கும் விடுதியின் கழிவுநீர் அருகில் இருந்த ஏரியில் கலப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் அந்தத் தங்கும் விடுதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset