
செய்திகள் உலகம்
பாலியல் குற்றவாளி வழக்கில் ட்ரம்ப் பெயரா?: அமெரிக்காவில் வெடிக்கும் சர்ச்சை
நியூயார்க்:
எப்ஸ்டீன் ஃபைலில் ட்ரம்பின் பெயர் இருப்பதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது வாழ்த்து கடிதம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எப்ஸ்டீன் ஃபைல் - உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக எடுத்த முதல் அஸ்திரம்.
எலான் மஸ்க் பதிவு
ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மோதல்போக்கு உண்டான புதிதில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "ட்ரம்ப் பற்றி இப்போது ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். ட்ரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஃபைலில் உள்ளது. அது தான், அந்த ஃபைலை பொதுவெளியில் வெளியிடாததற்கான முக்கிய காரணம். ஹேவ் ஏ நைஸ் டே DJT" என்று குறிப்பிட்டிருந்தார்.
யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுப்பவர், குழந்தைகளைக் கடத்துபவர் ஆவர்.
இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த ஏகப்பட்ட குற்றங்கள் அவர் மீது உள்ளன. அவர் குழந்தைகளைக் கடத்துவது அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்கள், பிரபலங்களுக்காக என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், ட்ரம்பிடம் இந்த ஃபைல் குறித்து கேட்கப்பட்டபோது, "எனக்கு எதிராக முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் இயக்குநர் ஜேம்ஸ் கோமியால் புனையப்பட்ட ஆவணங்கள் ஆகும்" என்று பதிலளித்திருந்தார்.
2024-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, தான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், எப்ஸ்டீன் ஃபைலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், இப்போது அது தனக்கு எதிராக புனையப்பட்ட ஒன்று என்று கூறுகிறார். இதனால், ஒருவேளை அவரது பெயரும் அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் ட்ரம்ப் வெளியான வாழ்த்து
இந்த நிலையில், தற்போது எப்ஸ்டீனுக்கு ட்ரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கடிதம் வெளியாகி உள்ளது. இதை 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்னும் அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கிஸ்லைன் மேக்ஸ்வெல் எப்ஸ்டீனின் கூட்டாளி ஆவார். இவர் 2003-ம் ஆண்டு எப்ஸ்டீன் பிறந்தநாளுக்காக, பலரிடம் இருந்து வாழ்த்து கடிதங்களைப் பெற்று ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார்.
அதில் ட்ரம்பின் கடிதமும் இடம்பெற்றிருக்கிறது. ட்ரம்ப் ஒரு பெண்ணின் அவுட்லைன் வரைந்த பேப்பரில் வாழ்த்து கடிதத்தை டைப் செய்துள்ளார். இந்தக் கடிதத்தில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
இந்த கடிதம் வெளியானதில் இருந்து ட்ரம்பிற்கு எதிர்ப்பு மிக அதிகமாக பரவி வருகிறது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது.
அது என்னுடைய வார்த்தைகள் அல்ல... நான் அப்படி பேசவும் மாட்டேன். நான் வரைந்ததே கிடையாது. நான் ரூபர்ட் முர்டோக்கிடம் இப்படி போலி கதைகளை அச்சிடக் கூடாது என்று கூறினேன்.
ஆனால், அவர் அதை செய்துள்ளார். அவர் மீதும், அவரது மூன்றாம் தர செய்தித்தாள் மீதும் வழக்கு தொடர போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- நிவேதா
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm