
செய்திகள் கலைகள்
'கிங்' படப்பிடிப்பு ஒத்திவைப்பு; சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்
மும்பை:
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் படத்தில் பிரதான வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மே மாதத்திலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. மும்பை படப்பிடிப்பில் ஷாருக்கான் பங்கேற்று வருகிறார்.
அவர் இடம் பெற்ற காட்சிகள் மும்பை கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் நடந்து வந்தது.
படப்பிடிப்பின் ஆக்ஷன் காட்சியில் ஷாருக்கான் பங்கேற்ற போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை குறித்துத் தெரியவில்லை. ஆனால், ஒரு மாதம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவருக்கு தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக ஷாருக்கான் படப்பிடிப்பில் பங்கேற்கும் போது அடிக்கடி தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள காயம் மிகவும் பெரியது கிடையாது என்றாலும், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am