
செய்திகள் உலகம்
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 27 உடல்கள் மீட்பு
ஹனோய்:
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உலக அளவில் வியட்நாம் சுற்றுலா சார்ந்து பிரபலமான பயண இடங்களில் (டெஸ்டினேஷன்) ஒன்றாக அறியப்படுகிறது. வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஹலாங் பே (Halong Bay) விரிகுடா பகுதி உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று 53 பேருடன் சுற்றுலா படகு ஒன்று கடல் பகுதியில் அந்த நாட்டின் நேரப்படி மதியம் 2 மணிக்கு சென்றது.
அப்போது திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக அந்த படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணித்தவர்கள் கடலில் விழுந்துள்ளனர்.
இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என தகவல். 14 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் காற்று வேகமாக வீசுவதாகவும், இடி மின்னலுடன் மழை பொழிந்து வருவதாகவும் தகவல்.
ஹலாங் பே பக்திக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். அங்கு கடலில் படகுகளில் பயணித்து இயற்கையை ரசிப்பார்கள். இந்நிலையில்தான் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:52 pm
இந்தியத் தலைவர்கள் பேச்சு அர்த்தமற்றது: பாகிஸ்தான்
July 31, 2025, 11:12 am
உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 31, 2025, 10:27 am
இந்திய இறக்குமதிக்கு அபராதமும் 25 விழுக்காடு வரியும் விதிக்க டிரம்ப் உத்தரவு
July 31, 2025, 8:32 am
சிங்கப்பூர் மார்சிலிங் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் தீ
July 30, 2025, 10:21 pm
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கை
July 30, 2025, 7:56 pm
பிரான்ஸை தொடர்ந்து பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு
July 28, 2025, 3:43 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
July 26, 2025, 5:18 pm
தரையிறங்கிய விமானம் மோதியதால் மாண்ட மான்கள்
July 26, 2025, 4:21 pm
இந்தியர், சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது: டிரம்ப் உத்தரவு
July 26, 2025, 4:16 pm