செய்திகள் உலகம்
இந்தியா - பாக்கிஸ்தான் போரின் போது 5 ஜெட் விமானங்களை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு விருந்தின்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது, போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 4 அல்லது 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. ஆனால், 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். ஏனெனில், நிலைமை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்தது. இல்லையா?
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை நிறுத்திக்கொள்வதில் முன்னும் பின்னுமாக இருந்தன. அது பெரிதாகிக்கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் நாங்கள் அதை முடிவுக்குக்கொண்டு வந்தோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்வீர்கள் எனில், குறிப்பாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவீர்கள் எனில் உங்களுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட மாட்டோம் என கூறினேன். ஏனெனில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த அணுஆயுத நாடுகள்.
8 ஆண்டுகளில் எந்த அமெரிக்க நிர்வாகமும் சாதிக்க முடியாததை ஆறு மாதங்களில் நாங்கள் சாதித்துள்ளோம். இதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம். இவை கடுமையான போர்கள்” என தெரிவித்தார்.
அந்த 5 ஜெட் விமானங்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியா ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
