நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்

புது டெல்லி:

ஹரியாணாவில் நிலம், நதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மேலும், வதேராவுக்குச் சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளபோதும் முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படுகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை முன் வதேரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

2008இல் ஹரியாணாவில் 3.5 ஏக்கர் நிலத்தை வதேராவின் நிறுவனம் ரூ.7.5 கோடிக்கு வாங்கி 2012 இல் ரூ.58 கோடிக்கு டிஎல்எஃப் கட்டுமான நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டது என்பது புகாராகும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset