நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் 3ஆவது பாடல் வெளியாகவுள்ளது: சன் பிக்சர்ஸ் படக்குழுவினர் அறிவிப்பு 

சென்னை: 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கூலி. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கூலி படத்தின் மூன்றாவது பாடலின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது மூன்றாவது பாடலான "பவர் ஹவுஸ்" என்ற பாடல் வருகிற 22ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

ஏற்கனவே கூலி படத்திலிருந்து சிக்குட்டு, மோனிகா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset