
செய்திகள் இந்தியா
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
புது டெல்லி:
கொரோனாவை பரப்பியதாக தப்லீக் ஜமாத்தினர் 70 பேர் மீது பதியப்பட்ட 16 வழக்குகளையும் தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்பதை நிரூபிக்க வலுவான அறிவியல் சான்றுகள் இல்லை என்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அனைத்து வழக்ககளையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முன்பே தில்லி நிஜாமுதீனில் உள்ள மர்கஸில் பல்வேறு நாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத்தினர் தங்கியிருந்தனர்.
அவர்கள் வேண்டுமென்றே கொரோனா பரவலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி அவர்களை தில்லி போஸீஸார் கைது செய்தனர்.
இதில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் வெளிநாட்டு பயணிகளாக வந்த தப்லீக் ஜமாத்தினர் அடைக்கப்பட்டனர்.
பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அவர்களுக்கு நீதிமன்றம் மூலமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு விடுதலையாகி சென்றனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றம் அவர்கள் மீதான் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்துள்ளது.
அதே காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்த போது குஜராத்தில் உள்ள விளையாட்டரங்கில் லட்சக்கணக்கான பிரதமர் மோடி தலைமையில் மக்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மோடி மீதும் அன்றைய பாஜக அரசு மீதும் குற்றம் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm