நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்

மும்பை: 

தில்லியிலிருந்து கோவா சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு செயலிழந்ததால் மும்பையில்  அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6இ6271 இண்டிகோ விமானம் புதன்கிழமை இரவு 9.52 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசர கால நிலையில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் உள்ள மற்றொரு என்ஜின் மூலம் இந்த தரையிறக்கம் சாத்திமாகனதாக கூறப்படுகிறது.

எனினும், தொழில்நுட்பக் கோளாறால் விமானம் தரையிறக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset