நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

தெஹ்ரான்:

இந்தியர்கள் யாரும் தேவையின்றி ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.

அதனால் இந்தியர்கள் இங்குப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தூதரகம் கேட்டுக் கொண்டது.

ஈரானுக்கு இந்தியர்கள் யாரும் தேவையற்ற பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, அங்கு நிலவும் சூழலைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் ஈரானில் ஏற்கனவே இருக்கும் இந்தியர்களும், நாடு திரும்ப விரும்பினால் விமானங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து தற்போது உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset