நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யேமனில் கேரள செவிலியரின் மரண தண்டனையை நிறுத்திய கேரள காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது

புது டெல்லி:

யேமனில் கேரள செவிலியர்  நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனையை கடைசி நேரத்தில் கேரளத்தின் முஸ்லிம்  தலைவர் காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது நிறுத்தினார்.

கொலை வழக்கில் நிமிஷாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட இருந்தது. இதைத் தடுக்க இந்திய அரசு ராஜீய ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் அளிக்க வில்லை. இதனை இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்துவிட்டது.

இதையடுத்து, கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது இறுதிக்கட்டத்தில் நடத்திய  பேச்சுவார்த்தையில் நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான அபுபக்கர் அஹமது, யேமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து,  உயிரிழந்த தலால் அப்து மெஹதி குடும்பத்தினருக்கும், ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் பிரதிநிதிகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவை எடுத்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset