நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஈரான்:

ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் தலைமை மதகுரு கமேனி உயிரிழந்து விட்டதாக ஈரானிய உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன், பேரனும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.

இந்த தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

அதுமட்டுமின்றி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு மகளிா் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 85 மாணவிகள் உயிரிழந்தனா்.

50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset