நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அயத்துல்லா அலி கமெனி மரணத்திற்கு கண்ணீர் வடிக்கும் மக்கள்

டெஹ்ரான்:

அமெரிக்கா, இஸ்ரேலின் கொடுரமான தொடர் தாக்குதல்களில் ஈரானின் ஆன்மிக உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் 40 நாள் துக்கம் அனுஷ்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமையின் தாக்குதல்களில் கமெனியின் மகள், மருமகன், பேரன் உட்பட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். 

இந்தப் படுபாதக் கொலைச் சம்பவம் 1979 இல் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஈரானின் தலைமைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடியாகும்.

அவரது அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 40 நாள் இருந்து அஞ்சலி செலுத்தும் காலத்திற்கு மேலதிகமாக ஏழு நாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் இருந்து செய்தி அனுப்பும் அல்ஜசீராவின் தோஹித் அசாதி, கமெனியின் கொல்லப்பட்ட செய்தியைத் தொடர்ந்து தலைநகரின் தெருக்களில் மக்கள் கூடி அழுது வருவதாக தெரிவித்தார். அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்து வருகின்றார்கள்.

அவை நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில் தொழுகைகளும் பிரார்த்தனைகளும் தொடர்ந்தி நடைபெறும் என்று குறிப்பிட்டார்.

சிராஸ், யாசுஜ், லோரெஸ்தான் உள்ளிட்ட பிற இடங்களிலும் கமெனி கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

ஈரானிய அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய காட்சிகளில், மாஷாத்தில் உள்ள இமாம் ரெசா பள்ளியில் ஆதரவாளர்கள் அன்னருக்கு அஞ்சலி செலுத்துவதை தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அங்கு பலரும் அழுத கண்களோடு கவலையோடு பிரார்த்தித்து வருகின்றார்கள்.

அண்டை நாடான ஈராக்கிலும் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஈராக் மூன்று நாள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. 

பாக்தாதில், ஈராக்கிய அரசு கட்டிடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள இடங்கள் பலத்த பாதுகாப்புடைய பச்சை மண்டலத்தில் (Green Zone) பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset