நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்

லண்டன்: 

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 48-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். 

இதில் அரினா சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில்37-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் ஓல்கா டானி லோவிக்கை தோற்கடித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset