நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதை ஜேடிதி இலக்காக கொண்டுள்ளது: நிர்வாகி லூயிஸ்

ஜொகூர்பாரு:

பிபா கிளப் உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதை ஜேடிதி கிளப் இலக்காக கொண்டுள்ளது.

ஜேடிதி கிளப்பின் தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் கார்சியா இதனை கூறினார்.

மலேசியாவில் கால்பந்து ஜாம்பவான்களான  ஜேடிதி அணி விளங்குகிறது.

இந்த கிளப் ஒரு நாள் பிபா கிளப் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட்
 மூலம் போட்டிக்கு  ஒவ்வொரு முறையும் தொடர்ந்து முன்னேறினால், கனவை அடைவது சாத்தியமாகும் என்று விளக்கினார்.

பிபா கிளப் உலகக் கிண்ண போட்டியின் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் சாம்பியன்களுக்கு மட்டுமல்ல ஆசிய அணிகளுக்கும் அதிக இடங்களைத் திறக்கும்.

அவ்வகையில் ஆசிய கிளப் தரவரிசையை மேம்படுத்த வேண்டும்.

உலக கிளப் கால்பந்தின் மிக உயர்ந்த கட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த சிறந்த நிலையில் இருக்கவும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் எலைட் போட்டியில் தொடர்ந்து மேலும் நிலைகளுக்கு முன்னேற ஜேடிதி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கை அடைவது எளிதான காரியமல்ல. ஆசியாவில் கால்பந்தின் தரம் மிக உயர்ந்தது. 

இந்த மகத்தான பணியில் ஜேடிதி வெற்றி பெற வேண்டுமானால் தொடர்ந்து போராட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset