நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது

லண்டன்:

முன்னணி ஆட்டக்காரர் ஸ்காட் மெக்டோமினேயை ஓல்ட் டிராபோர்டை விட்டு வெளியேற அக் கிளப் அனுமதித்துள்ளது.

இதன் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் உலக கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றைச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் மென்செஸ்டர் யுனைடெட் மெக்டோமினேயை இத்தாலிய கிளப்பான நபோலிக்கு 27.5 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தத்தில் விற்றது.

சிரி அ சாம்பியன் அணியில் இணைந்ததில் இருந்து மெக்டோமினே  அதிரடி விளையாட்டை காட்டினார்.

இதனால் முதல் சீசனில் நபோலி லீக்கை வெல்ல உதவியதன் மூலம் உடனடி ரசிகர் விருப்பமானவராக மாறிவிட்டார்.

மெக்டோமினேயின் பரிமாற்றக் கட்டணம் நிதி நிலை அறிக்கைகளில் நிகர லாபமாகக் கணக்கிடப்பட்டதால், 

அகாடமி வீரர் என்ற அவரது அந்தஸ்தை கருத்தில் கொண்டு, நிதி விதிமுறைகளுக்கு இணங்க உதவுவதற்காக மென்செஸ்டர் யுனைடெட் அவரை வெளியேற அனுமதித்தது.

ஆனால் அவ்வணி செய்த மிகப் பெரிய தவறாக கருதப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset