நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்

லண்டன்:

போர்த்துகீசிய கால்பந்து வீரரும் லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரருமான டியோகோ ஜோத்தா கார் விபத்தில் மரணமடைந்த செய்தி கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

28 வயதான டியோகோ ஜோத்தா தனது 26 வயதான தம்பி ஆண்ட்ரே சில்வாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அவர் செலுத்திய கார் A-52 நெடுஞ்சாலையில் உள்ள Palacios de Sanabria என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது.

இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மீட்பு துறையினர் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர். 

மருத்துவரகள் அக்காரில் பயணித்த டியோகோ ஜோத்தா மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும்  இறந்ததை உறுதிப்படுத்தினர்.

கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி, தனது நீண்ட காலத் துணைவி ரூட் கார்டோசோவைத் திருமணம் செய்த இரண்டு வாரங்களுக்குள் இந்தத் துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டியோகோ ஜோத்தா -  ரூட் கார்டோசோவா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக ஊடகங்களில் அவரின் உயிரிழப்புக்கு வீரர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset