நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்

தெலுங்கானா:

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சங்கர்பள்ளி அருகே நிகழ்ந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 13 விநாடி காணொலியில், கியா சோனெட் ரக கார் ஒன்று ரயில் தண்டவாளத்தில் ஓடுவதை பார்க்க முடிந்தது.

அப்பகுதி மக்களும், ரயில்வே ஊழியர்களும், போலீஸாரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்ததும் காணொலியில் காண முடிந்தது.

வேலையை இழந்து ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அப்பெண் இவ்வாறு காரை ஓட்டியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி கூறியுள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset