நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெம்போங் பாரு  ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயப் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது: டத்தோ ராஜா

கோலாலம்பூர்:

கெம்போங் பாரு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய இடத்தை காலி செய்யும் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் இதனை கூறினார்.

நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இவ்வாலயத்தில் இடத்தை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கெப்போங் மஇகா தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வாயிலாக இப்பிரச்சினை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச நிலம், சுரங்க அலுவலகத்தின் உதவி இயக்குநர் ஹிஷாம் பின் சூல்கிப்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆலயத்தின் தற்போதைய சூழ்நிலையையும் இந்தக் கோயிலுடன் தொடர்புடைய வரலாறு, ஆவணங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்ளூர் மக்களின்  நலனுக்காக இந்த ஆலய  இடத்தை வழிபாட்டுத் தலமாக கெசட் செய்யப்பட வேண்டும் என  நான் வலியுறுத்தினேன்.

இதன் அடிப்படையில்  இந்தக் கோயில் இடிக்கப்படாது என்று ஹிஷாம் உறுதியளித்துள்ளா.

மேலும் இந்தக் கோயில் இடத்தை வழிபாட்டுத் தலமாக கெசட் வெளியிட வேண்டும் என கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச நிலம், சுரங்க அலுவலகத்தின் இயக்குநரிடம் பரிந்துரை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இவ்வாலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வுக் காணப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக டத்தோ ராஜா சைமன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset