
செய்திகள் இந்தியா
மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு
புதுடெல்லி:
பஞ்சாபில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனால், அதன் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சமீபத்தில் காலமானார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏ பதவியை ஏற்க உள்ள நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாகிறது. இதனால், அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், இந்த வாய்ப்பை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2013-ல் டெல்லியில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது முதல் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக கேஜ்ரிவால் பதவி வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அத்துடன் தான் போட்டியிட்ட தொகுதியிலும் தோல்வி அடைந்த கேஜ்ரிவால் இப்போது எந்தப் பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெல்லியின் முன்னாள் முதல்வரான கேஜ்ரிவால் கூறும்போது, ‘நான் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக செல்ல விரும்பவில்லை. இப்பதவிக்கு யாரை அனுப்புவது என எங்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு முடிவு செய்யும்’’ என்றார்.
இதன் பின்னணியில் டெல்லி மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த கேஜ்ரிவால் விரும்புவதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm