
செய்திகள் இந்தியா
டில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு
புது டெல்லி:
இந்தியத் தலைநகர் டில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் மற்றும் தில்லியின் பல பகுதிகளில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும். தலைநகரில் பெரும்பாலும் நாளை பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 30 ஆம் தேதிக்குள் தில்லியை வந்தடைகிறது. இருப்பினும், ஜூன் 24 ஆம் தேதி முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2013ல் ஜூன் 16 ஆம் தேதி தலைநகரில் பருவமழை பெய்தது. கடந்தாண்டு ஜூன் 28-ம், 2023 ஜூன் 25-ம், 2022 ஜூன் 30ம், 2021 ஜூலை 13ல் பருவமழை தில்லியை அடைந்தது.
அடுத்த சில நாள்களுக்கு வானம் மேகமூட்டமாகவும், லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் எதிர்பார்க்கப்படும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.
டில்லியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இதுவரை, தில்லியில் 2.4 மி.மீட்டருக்கும் அதிகமான மழையுடன் மூன்று மழை நாள்கள் பதிவாகியுள்ளன.
தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் தில்லியில் வழக்கமான மழைப்பொழிவு சுமார் 43.3 மி.மீ. ஆகும். இருப்பினும் இதுவரை 89 மிமீ மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது.
தலைநகரில் கடந்த ஆண்டு ஜூன் 28ல் பருவமழை தொங்கியது, ஜூன் மாதத்தில் 74.1 மிமீ வழக்கமான மழையை விட 243.4 மிமீ அதிகமாகப் பெய்தது. சஃப்தர்ஜங்கில் மட்டும் 228.1 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளதாக ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm