
செய்திகள் இந்தியா
காஸா, ஈரான் தாக்குதலில் இந்தியா மவுனம்: மோடிக்கு சோனியா கண்டனம்
புது டெல்லி:
காஸா, ஈரான் மீது இஸ்ரேலின் தாக்குதல் விவகாரத்தில் இந்திய அரசு மவுனம் காத்து வருவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்து ஆங்கில நாளிதழிலில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், காஸா பேரழிவு, ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய அரசு மௌனம் சாதிப்பது, நமது தார்மீக மற்றும் ராஜீய பாரம்பரியங்களில் இருந்து கவலைக்குரிய விலகலை பிரதிபலிக்கிறது.
இது, இந்திய அரசின் குரல் இழப்பை மட்டுமன்றி மாண்புகளின் கைவிடுதலையும் குறிக்கிறது.
இனியும் தாமதிக்காமல், இந்தியா தனது குரலை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மனிதப் பேரழிவு சூழலில், இஸ்ரேலுடன் இணக்கமாக வாழக் கூடிய சுதந்திரமான இறையாண்மைமிக்க பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கும் இருதரப்பு தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால கொள்கை உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அரசு கைவிட்டுள்ளது.
ஈரான் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் வெடிகுண்டு தாக்குதல்களையும், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் கண்டிக்கிறது.
காஸா மீதான கண்மூடித்தனமான தாக்குதல் உள்பட இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகளைப் போலவே தற்போதைய தாக்குதலும் பொதுமக்களின் உயிர் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை புறக்கணித்துவிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள், ஸ்திரமின்மையை மேலும் அதிகரித்து, போருக்கான விதைகளை விதைக்கும்.
அமெரிக்க உளவுத் துறை தலைவரின் மதிப்பீடுகளையே நிராகரித்து, ஈரான் அணுஆயுதங்களைத் தயாரிக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறியது ஏமாற்றமளிக்கிறது.
மேற்காசியாவில் அவர் அழிவுகரமான பாதையைக் கடைப்பிடிக்கிறார் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am