நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

3 அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது ஏர் இந்தியா

மும்பை: 

விமானப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு நடைமுறையில்  விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதால் 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் DGCA உத்தரவிட்டது.

அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்த விபத்தில் 230 பயணிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

விமானப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்குவது, கட்டாய ஓய்வு அளிப்பது, உரிமங்களைச் சரிபார்த்தல் ஆகியவற்றில் ஏர் இந்தியா நிறுவனம்  மீறியிருப்பது தெரியவந்ததது.

இதையடுத்து, இதற்கு பொறுப்புடைய ஏர் இந்தியா மண்டல துணைத் தலைவர் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து  10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய DGCA உத்தரவிட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset