நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டெல்லியில் 15 ஆண்டுகளை கடந்த காலாவதியான வாகனங்களுக்கு ஜூலை 1 முதல் எரிபொருள் நிரப்ப தடை 

புதுடெல்லி: 

டெல்லியில் அடுத்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு விதிக்கப்பட்ட தடை அமல்படுத்தப்பட உள்ளது.

டெல்லியில் காற்று மாசு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், காற்றின் தரம் மேம்பட்ட பாடில்லை. குறிப்பாக, காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. 

இதன் காரணமாக, 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தடையை விதித்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. பின்னர், ஒன்றிய அரசும் அதற்கான புதிய சட்டங்களை பிறப்பித்தது.

CAQM directs Delhi authorities to deny fuel to all end-of-life vehicles  from July 1

டெல்லியில் சாலையில் இயக்கப்படும் இதுபோன்ற வாகனங்கள் கண்டறிந்து, பறிமுதல் செய்யப்பட்டு உடைப்பதற்கு அனுப்பப்படுகிறது.

அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இதுபோன்ற வாகனங்களுக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவறை செய்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset