நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உலகளாவிய ஒற்றுமைக்கான சக்தி யோகா: பிரதமர் மோடி

புது டெல்லி: 

யோகாவை தனிப்பட்ட பயிற்சியாக கருதாமல்  உலகளாவிய ஒற்றுமைக்கான சக்தியாக ஏற்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண்,  மாணவ, மாணவிகள் என 3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் நாள்தான் சர்வதேச யோகா தினம்.. யோகா என்பது வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டுமல்ல.

உலகளாவிய கூட்டாண்மை மற்றும் ஒற்றுமைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் ஏற்கப்பட வேண்டும். யோகாவை கூட்டு நல்வாழ்வுக்கான பங்களிப்பாக ஒவ்வொரு தேசமும் ஏற்க வேண்டும்.

உடல் பருமன் என்பது இன்று சர்வதேச அளவில் பெரிய சவாலாக உள்ளது. யோகா மூலம் 10 சதவீத உடல் பருமனைக் குறைக்கலாம் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset