நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தலுக்காக ரூ.1,494 கோடி செலவு செய்த பாஜக

புது டெல்லி: 

கடந்த ஆண்டு  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ரூ.1,494 கோடி செலவழித்துள்ளது. இது ஒட்டுமொத்த தேர்தல் செலவில் 44.56 சதவீதமாகும் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

அதாவது பிற கட்சிகள் ஒன்று சேர்ந்து செலவிட்ட தொகைக்கு ஈடாக பாஜக தேர்தல் செலவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடியை செலவிட்டுள்ளது.

தேர்தல் செலவு ஆவணங்களை 32 தேசிய, மாநில கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. அதன் அடிப்படையில் ஏடிஆர் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset