நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமான புக்கிங் 20 சதவீதம் சரிவு

புது டெல்லி: 

குஜராத் விமான விபத்தால், ஏர் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.

அகமதாபாதிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிஷங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 242 பயணிகள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவு சுமார் 20 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் கட்டணமும் 8 முதல் 15 சரிந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியாவின் 4 சர்வதேச விமானங்கள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

டெல்லியில் இருந்து புனேவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் பறவை மோதியதைத் தொடர்ந்து உடனே தரையிறங்கிய பின் கண்டறியப்பட்டது. இதனால் அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset